இரு மடங்கான காய்கறிகள் விலை: 100ஐ தொட்ட தக்காளி!!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (11:29 IST)
மழை காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
பருவமழைக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.40-ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதேபோல ஒரு கிலோ கேரட் ரூ.50-ல் இருந்து ரூ.70 ஆகவும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50ஆகவும் அவரைக்காய் ரூ.40-ல் இருந்து ரூ.75க்கும், உருளைக்கிழங்கு ரூ.25-ல் இருந்து ரூ.35-க்கும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்