கனமழை எதிரொலி: மேலும் 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:49 IST)
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒன்பது மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அறிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்