சட்டமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்த்து களம் காணும் உதயநிதி ஸ்டாலின்??

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (13:56 IST)
சட்டமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்த்து பேட்டியிடுவேனா என திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி பதிலளித்துள்ளார். 
 
திமுக தலைவராக ஸ்டாலின் பொருப்பேற்ற பின்னர் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயளாலராக நியமிக்கப்பட்டார். முதற்கு இத்ற்கு கட்சிக்கு வெளியிலும் உள்ளும் விமர்சனங்கள் எழுந்தது. 
 
கட்சிக்கு வெளியே எழுந்த விமர்சனங்களை பேசி  (பேட்டிகள் மூலம் பதில் அளித்து) சரி செய்த உதயநிதி, கட்சிக்குள் எழுந்த மறைமுக விமர்சனங்களை தனது செயல்பாட்டில் மூலம் சரி செய்தார். இதனையடுத்து அவர் மேயர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார் உதயநிதி அவர் கூறியதாவது, முதலில் ஆட்சியில் இருப்பவர்கள் மேயர் தேர்தல் நடத்தட்டும். நான் மேயர் தேர்தலில் போட்டிய வேண்டுமா வேண்டாம என்பதை கட்சி தான் முடிவெடுக்க வேண்டும். கட்சி சொன்னால் தேர்தலில் நிற்பேன். அது எந்த தேர்தலாக இருந்தாலும்.
 
இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்த்து களம் இறங்குவீர்களா என கேட்கப்பட்டது, இதற்கு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. கட்சி கட்டளையிட்டால் போட்டியிடுவேன். 
 
ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். பின்னர் அவரை எதிர்த்து போட்டியிடுவேனா என பார்க்கலாம். கட்சியும் தலைமையும் சொன்னால் யாரை எதிர்த்தும் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்