வாரிசு அரசியல் என்றால் என்னை மக்களே நிராகரிக்கட்டும்! உதயநிதி ஸ்டாலின் பதில்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (07:35 IST)
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

திமுக சார்பாக இந்த முறை அந்த கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் இருந்து ஸ்டாலின், கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் ஆகியவர்களுக்குப் பிறகு மூன்றாவது தலைமுறையாக உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்துள்ளார். இதனால் திமுகவின் மீதும் உதய் மீதும் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக வைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட நேற்று உதயநிதி வேட்பு மனுதாக்கல் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாரிசு அரசியல் விமர்சனம் குறித்து பேசினார். அப்போது ‘சட்டமன்ற உறுப்பினர் நியமனப் பதவி அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி. நான் வாரிசு என்று மக்கள் நினைத்தால் என்னை அவர்களே நிராகரிக்கட்டும். ’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்