எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று காட்டுங்கள் பார்க்கலாம்: ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!

திங்கள், 15 மார்ச் 2021 (18:29 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன 
 
குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் பேசிய போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று சூளுரைத்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என ஸ்டாலின் ஜோசியம் சொல்கிறார். முதலில் எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெறட்டும் பார்க்கலாம்’ என்று சவால் விடுத்துள்ளார்
 
இந்த சவாலுக்கு முக ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்