உதயநிதி, பேசியது தவறு.. ஆனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது: சனாதன வழக்கு முடித்துவைப்பு..!

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (15:14 IST)
சனாதனம் குறித்துஅமைச்சர் உதயநிதி பேசியது தவறு தான் என்றாலும் இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார் 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்தும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என திமுக எம்பி ராசா பேசியது குறித்தும் வழக்கு தொடர்ந்த இந்து முன்னணி மாநில செயலாளர் இருவரையும் பதவியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார் 
 
இந்த மனு இரு தரப்பிலும் விசாரணை செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பை வாசித்தார். இந்த தீர்ப்பில் அமைச்சர் உதயநிதி மற்றும் ராசா பேசியது தவறுதான் என்றாலும் மனுதாரர் கேட்கும் கோரிக்கையில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அவர்களது பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை 
 
எனவே எந்த விதமான உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது என்று இந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வாதாடிய போது ’இந்து சமய அறநிலை துறைக்கு அமைச்சராக இருக்கும் சேகர் பாபு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் துறை அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் என்று கூறப்பட்டது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்