அதேபோல் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு இன்று மாலை 6 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி தண்டபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.