உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் !

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (20:25 IST)
உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை  நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த நிலையில்,  உச்ச நீதிமன்றப் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே,  தற்போதைய தலைமை நீதி என்.வி. ரமணா தனக்குப்பின் அடுத்த  நீதிபதியாக  யு.யு.லலித்தை நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இன்று  இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார்.

 எனவே  உச்ச நீதிமன்றத்தின் 49 வது  தலைமை நீதிபதியாக யுயு. லலித் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

மேலும், உச்ச  நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த 2014 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட யு.யு.லலித்  முத்தலாக் உள்ளிட்ட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்