ஆங் சான் சூகிக்கு பாதி மன்னிப்பு: சிறை தண்டனையும் குறைப்பு!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:41 IST)
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைந்தார் ராணுவ தளபதி. 

 
மியான்மரில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூ ச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக கூறி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
பிப்ரவரி மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் ஆங் சான் சூகி. 76 வயதாகும் அவர் மீது ஊழல், அரசு ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 
ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை அளித்ததை எதிர்த்து அவரை விடுதலை செய்யக்கோரி மியான்மர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் ராணுவ நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஆம், உலக நாடுகளின் கண்டனத்தை தொடர்ந்து ஆங் சான் சூகிக்கு பாதி மன்னிப்பு அளிப்பதாக கூறியிருக்கும் ராணுவ தளபதி, தண்டனை காலத்தை 2 ஆண்டுகள் குறைப்பதாக அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்