மீண்டும் இருவழி சாலையானது அண்ணா சாலை..

Arun Prasath
புதன், 11 செப்டம்பர் 2019 (13:28 IST)
சென்னை அண்ணா சாலை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரு வழி சாலையானது.

சென்னை அண்ணா சாலை, மெட்ரோ பணிகளுக்காக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. தற்போது மெட்ரொ பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜி.பி.சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்ட சோதனையாக அண்ணா சாலை ஒயிட்ஸ் சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அண்ணா சிலையிலிருந்து ஜெமினி மற்றும் தேனாம்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள் LIC வழியாக அண்ணா மேம்பாலத்திற்கு செல்லலாம். மேலும் வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது போல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து அண்ணா சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்