லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்ற முதல்வர் பழனிசாமி நேற்று நாடு திரும்பினார். அதன் பின்பு அடுத்த கட்ட பயணமாக நீர் மேலாண்மையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலுக்கு பயணிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க விட்டுவிட்டு, இஸ்ரேலுக்கு போய் எதற்கு நீர் மேலாண்மையை ஆய்வு செய்யவேண்டும்? என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு முன் முதலமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்து “தமிழக அமைச்சரவை, சுற்றுலாத் துறை அமைச்சரவையாக மாறியது” என முக ஸ்டாலின் கேலி செய்தார். பின்பு வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டார். அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெள்ளை அறிக்கையுடன், மஞ்சள், பச்சை, அறிக்கையுடன் வெள்ளரிகாயையும் சேர்த்து தருவோம் என பதிலளித்து சர்ச்சையை கிளப்பினார்.