பெங்களூர் தப்பிச் செல்ல முயன்ற TTF வாசன்?... கைது செய்த போலீஸார்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (09:22 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.இதையடுத்து, சமீபத்தில், மதுரை  ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, 150 கிமீ வேகத்தில்  பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டிருந்தார்.  இது வைரலானது. தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோவை வெளியிட்ட  டிடிஎஃப் வாசன்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து,  TTF வாசன் மீது ஏற்கனவே போத்தனூர் போலீஸார் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது சூலூர் போலீஸார் 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில்.,    மதுக்கரை நீதிமன்றத்தில்  நேற்று சரணடைந்த டிடிஎஃப் வாசன் மாலை வரை நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார். அவரிடம் 2 உத்தரவாதம் பெறப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று டிடிஎஃப் வாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,  டிடிஃப்வோட பவர் தெரியாம நியூஸ் சேனல்ஸ் விளையாட்டிட்டு இருக்கீங்க….அப்பிடீனு கேட்க தோணுது. ஆனால் கேட்க மாட்டேன். நீயூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது; உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்குது …உங்களோட லிமிட்டலையே இருங்க..என்னைப் பற்றி போலியான செய்திகளை பரப்ப வேண்டாம்….. டிடிஎஃப் வாசன் மிரட்டரான்னு நினைப்பீங்க… நான் மிரட்டல….பிரபல யூடியூபர்களான மதன், இர்பான் என எல்லோரையும் செஞ்சிட்டாங்க..அடுத்து நீங்களாகூட இருக்கலாம்…. நாம் எவ்வளோ கஷ்டப்பட்டு ஹார்ட்வொர்க் பண்ணி இந்த இடத்திற்கு வந்திருக்கோம்னு அவங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு அவர் பெங்களூருக்கு தப்பி செல்ல முயன்றதாக சூலூர்பேட்டை போலிஸார் கைது செய்து பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்