ஆடி அமாவாசைக்கு காவிரி கரையில் கூட கூடாது! – திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (16:32 IST)
நாளை ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையம் கூறியுள்ளது.

ஆடி அமாவாசை நாளான நாளை இந்துக்களுக்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையில் காவிரி நதிக்கரையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை மக்கள் பலர் கடைபிடித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கூடவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமாவாசை நாளான நாளை திருச்சி காவிரிக்கரையில் மக்கள் கூட கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி மக்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் காவிரிக்கரையில் மக்கள் கூடுவதை தவிர்க்க அம்மா மண்டபம், காவிரி படித்துறை பகுதிகளில் காவல் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்