தமிழகத்தில் இதுவரை தொங்கு சட்டசபை ஏற்பட்டதில்லை என்பதும், கடந்த 50 ஆண்டுகளாக அதிமுக அல்லது திமுக மாறி மாறி பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால், அரசியல் விமர்சகர்கள் முதல் முறையாக தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பக்கம் திமுக கூட்டணி வலிமையாக இருந்தாலும், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் போதிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் வெளியேற தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனித்து விடப்பட்டிருக்கும் விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவரும் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த கூட்டணியில் திமுகவிலிருந்து பிரிந்து வரும் கட்சிகள் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, முதல்முறையாக மூன்று கூட்டணிகளும் வலிமையாக இருப்பதால், தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக விஜய்-சீமான் கூட்டணி சேர்ந்தால் 50 முதல் 100 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.