கழிப்பறைக்கு அறிஞர் அண்ணா பெயர்.. இரவோடு இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!

Siva

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (13:51 IST)
கோவையில் கழிப்பறைகளுக்கு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் ஆகியோர்களின் பெயர்கள் வைக்கப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததால் இரவோடு  இரவாக அகற்றப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
 
கோவை 95வது வார்டு அண்ணா நகரில் மாநகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. அதற்கு புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், முன்பக்க சுவரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா  பெயரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கக்கன் பெயரும் வைக்கப்பட்டது.
 
இதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த நிலையில், ஈரோடு இரவாக அந்த பெயர்கள் அகற்றப்பட்டன.
 
இது குறித்து கோவை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்