முதல்வரை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் .எஸ்.சிவசங்கர்

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:02 IST)
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ். எஸ் சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்துத் துறையை முதல்வர் ஸ்டாலின் மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக  கூறப்படுகிறது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சர்கள் மாற்றம் தற்போது நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் போக்குவரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.எஸ். சிவசங்கர் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்