தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெள்ளி, 30 ஜூன் 2023 (15:40 IST)
தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நீலகிரி கோயம்புத்தூர் கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஜூலை 3ஆம், தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று ஜூலை 4ஆம் தேதியும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்