நாளை முதல் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை! – போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (15:09 IST)
நாளை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வபோது வழங்கப்பட்ட தளர்வுகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு மொத்தமாகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் மக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற நடத்துனர்கள் வலியுறுத்து போக்குவரத்து கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்