இன்று 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை..

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:29 IST)
தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்பதால் மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஏற்கனவே பரவலாக மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் மிக வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்