அரசு பேருந்து பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! – ஈஸியா இலவசமா புகார் கொடுக்கலாம்!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (09:45 IST)
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகள் புகார் அளிக்க இலவச சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் நகர, மாநகர பேருந்துகள், கிராம வழி பேருந்துகள் பல செயல்பட்டு வருகின்றன. இதில் உள்ளூர், நகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு அமைதியான, மகிழ்வான பயணத்தை உறுதி செய்யும் வகையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் பல விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே பயணிகளிடம் சில நடத்துனர்கள், ஓட்டுனர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக புகார்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் பயணிகள் தங்கள் புகார்களை பதிவு செய்ய எளிமையான முறையை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இனி பயணிகள் தங்கள் புகார்களை இலவச தொலைபேசி எண் மற்றும் இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலவச புகார் எண்ணை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 1800 599 1500 என்ற எண்ணில் பேருந்து பயணம் தொடர்பான புகார்களை இலவசமாக போன் செய்து அளிக்கலாம். அதேபோல arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்