டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

Senthil Velan
சனி, 14 செப்டம்பர் 2024 (17:07 IST)
குரூப்-2 தேர்வில் ஆளுநர் அதிகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 2,763 தேர்வு மையங்களில் நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. 
 
இந்தத் தேர்வை எழுத மாநிலம் முழுக்க 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. மொத்தம் 5,81,305 பேர் இந்த குரூப் 2 தேர்வை எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நடந்த முடிந்த குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
 
கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார். காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது. 
 
A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது. 
 
B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.
 
C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி. 
 
D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை. 
 
E. விடை தெரியவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல், திமுகவின் கொள்கைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து வருகிறார்.


ALSO READ: வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!


இந்த நிலையில் ஆளுநரின் பணிகள் குறித்த கேள்வி தமிழக அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வில் கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்