கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்திரதுர்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த கோவிந்த் கர்ஜோல் உள்ளார். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீப காலமாகப் பள்ளியில் மாணவ மாணவிகள் கழிவறை சுத்தம் செய்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு கண்டனங்களை பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
மாணவனின் கையில் ஆசிரியர் துடைப்பத்தை கொடுப்பதை குற்றமாக கூறினால், சுத்தம் செய்யும் வேலை என்பது கீழான செயல் என்று மாணவனுக்கு எண்ணம் ஏற்படும் என்று கோவிந்த் கர்ஜோல் தெரிவித்தார். இவரது சமீபத்திய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.