புதிய விவசாய மின்சார இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்தப்படும் நிலையில் இதனால் இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.
விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புகளின் பயன்பாட்டை அறிய மீட்டர் கருவி பொறுத்தும் பணி துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் விவசாயிகள் 5 குதிரை திறனுக்கு மேல் மோட்டார் பயன்படுத்தினால் தலா 20 ஆயிரம் ரூபாய் ஜூன் மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்ற மின்வாரியத்தின் அறிவிப்பும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட இணைப்புக்கு ஒரு (HP) குதிரை திறனுக்கும் 20 ஆயிரம் வைப்பு தொகை செலுத்தவும் விவசாயிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரியம் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் எனவும், விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என கணக்கிடவே மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இலவச மின் இணைப்பு அளிக்கும்போது மீட்டர் பொருத்தும் நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதாகவும் விளக்கியுள்ளது.