பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது உடல்குறைபாடுகளை குறிப்பிடக்கூடாது: அரசாணை வெளியீடு..!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (11:52 IST)
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது மாணவர்களுக்கு இருக்கும் குறைபாடுகளை விண்ணப்பங்களில் குறிப்பிடக் கூடாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காது கேளாதவர்கள் வாய் பேச முடியாதவர்கள் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் மாணவர் சேர்க்கையின் போது இனி பயன்படுத்தப்படாது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி  என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் என்றும் தனிப்பட்ட குறையை சுட்டி காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதை தடுக்கும் வகையில் புது சட்ட திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பல்கலைக்கழக சட்டத்திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இது போன்ற பிரிவுகள் கேள்விகளாக கேட்கப்படுவது தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்தால் தேர்வுக்கான சலுகைகள் கோருதல் போன்றவற்ற இனி மேற்கொள்ள முடியும் என்றும் தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்