துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அதிகரிப்பு

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (17:33 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அறிவித்த நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட காரணம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளது என்று அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இந்த சம்பவத்தை கண்டித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்