இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை ஆளிங்கட்சியினர் யாரும் சென்று பார்க்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தனர். இது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பட்டது அதற்கு அவர், தூத்துகுடியில் 144 தடை போடப்பட்டிருக்கிறது, நான் சட்டத்தை மதிப்பவன். அதனால் செல்லவில்லை என்று பதில் அளித்தார். 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது தெரியாமல் தமிழ்நாட்டு முதல்வர் இருப்பதை பலர் விமர்சனம் செய்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்த, காயமடைந்த மக்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் நேரில் சென்று ஆறுதல் கூற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடிக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.