தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் - பொன். ராதாகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (15:53 IST)
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழகத்தில் ஊடுருவிக்கும் தீவிரவாதிகளே காரணம், என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் வரை பயங்கரவாதிகள் ஊடுருவியதால் தான் போராட்டம் வெடித்தது என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்