கடந்த மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ், டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஒருநாள் அங்கேயே தங்கியிருந்து ஜல்லிக்கட்டுக்கான தனிச்சட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஈபிஎஸ், ஜல்லிக்கட்டு பிரச்சனை தீர உதவி செய்ததற்கு அவரிடம் நன்றி தெரிவித்தார்
மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் உள்பட பல கோரிக்களை உடனடியாக நிறைவேற்றுமாறு பிரதமரிடம் தான் கேட்டுக்கொண்டதாக முதல்வர் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்
மேலும் மீனவர்களின் சிறப்பு திட்டத்திற்காக 1650 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வறட்சி நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிககி வைத்தார்.
பிரதமர்-முதல்வர் சந்திப்பினால் தமிழக மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்