யார் அந்த சார் என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலின் ஆட்சியில் தவறு செய்யும் ஒரு சார் காப்பாற்றப்படுவதால் தான் மேலும் பல சார்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.