முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு 120 ஆடுகள் மற்றும் 400 கோழிகளுடன் பிரியாணி செய்து விழாவை கொண்டாடினர்.
தமிழகத்தில் பிரபலமான அசைவ உணவங்களில் முக்கியமான ஒன்று இந்த முனியாண்டி விலாஸ். இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள், வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி சாமிதான் இவர்கள் வெற்றிக்கு காரணம் என ஆண்டுதோறும் தை, மாசி ஆகிய மாதங்களில் ஒன்று கூடி திருவிழா நடத்துவது உண்டு.
அதுபோன்று நடைபெற்ற திருவிழாவில் 120 ஆடுகள் மற்றும் 400 கோழிகளுடன் பிரியாணி செய்து திருவிழாவை கொண்டாடினர். இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. சிலர் சாப்பிடும், பார்சல் செய்து எடுத்துச் சென்றனர்.
ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு ஆண்டு தோறும் இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள், முனியாண்டி கோவில் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.