தல மகரசங்கராந்திக்கு மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனுக்கு 130 வகை உணவுகளை பரிமாறி அசத்தியுள்ளனர் பெண் வீட்டார்.
தமிழ்நாட்டில் தை முதல் நாள் கொண்டாடுவது போல, ஆந்திரா பக்கம் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. பொங்கலோ, மகர சங்கராந்தியோ எந்த பண்டிகையாக இருந்தாலும் புது மாப்பிள்ளைகளுக்குதான் ஏக வரவேற்பு. முதல் மகரசங்கராந்தி கொண்டாடும் புது மாப்பிள்ளையை மாமியார் வீட்டில் வெகுவாக கவனிப்பது உண்டு.
அப்படியாக தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள சாரதா நகரை சேர்ந்த கல்பனா என்பவர், திருமணமான தனது மூத்த மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் சங்கராந்தி விருந்து வைத்துள்ளார். இதற்காக மட்டன், சிக்கன், மீன் தொடங்கி பல வகை சைவ, அசைவ உணவுகள், வகைவகையான இனிப்புகள் என மொத்தம் 130 வகை உணவுகளை சமைத்து பரிமாறியுள்ளார்.
புதுமாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டில் விருந்து வைப்பது வழக்கம்தான் என்றாலும் இதுபோல 100க்கும் மேற்பட்ட உணவுகளை சமைத்து பரிமாறுவது தற்போது அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.
Edit by Prasanth.K