ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு தேதி அறிவிப்பு..!

புதன், 12 ஜூலை 2023 (19:17 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும் என்ற நிலையில் ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16ஆம் தேதி திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூலை 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது என்றும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18ஆம் படி வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
ஜூலை 21ஆம் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அதன் பிறகு 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்