தமிழக அரசு வாங்கிய தடுப்பூசிகள் தனியாருக்கு விற்பனை! – திருப்பூர் மருந்தாளுநர் பணி நீக்கம்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:46 IST)
திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை முறைகேடாக தனியார் மருத்துவமனைக்கு வழங்கிய அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் தனித்தனியாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் அரசு சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை மருந்தாளுநர் முறைகேடாக தனியார் மருத்துவமனைக்கு அளித்ததாகவும், அது திருப்பூர் தனியார் ஆலை பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர். சம்பந்தபட்ட மருந்தாளுநரை பணி நீக்கம் செய்ததுடன், முறைகேடாக தடுப்பூசி பெற்ற தனியார் மருத்துவமனைக்கும் தடுப்பூசி செலுத்தும் அனுமதியை ரத்து செய்தது. இதனால் அம்மருத்துவமனையின் பெயர் கோவின் இணையதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்