ஊரடங்கில் தளர்வுகள்; பாதிப்பு குறைவான மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பா?

வெள்ளி, 11 ஜூன் 2021 (10:26 IST)
தமிழகத்தில் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அறிவிக்கப்பட உள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு கடந்த வாரம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 14ம் தேதி முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் வெளிமாநிலங்களுக்கு மது தேடி செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்