அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பெரும்பாலானோர் கருதினர். குறிப்பாக கமல்ஹாசன் கட்சி மீது இளைஞர்களுக்கு அபார நம்பிக்கை எழுந்தது. இதனால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மாணவர்கள், இளைஞர்கள் அந்த கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர்
ஆனால் கமல் கட்சி வேட்பாலர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வு அடைந்தனர்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கமல் கட்சியில் இருந்து மூன்று பேர் இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பாராளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஸ்ரீகாருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ரவி ஆகியோர் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இதனால் கமல்ஹாசன் உள்பட அவரது கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் தினகரன் கட்சியைபோல் கமல்ஹாசன் கட்சியின் கூடாரமும் காலியாகிவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.