மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா 56 தொகுதிகளிலும் தேசியவாத காங். 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றறுள்ளதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். இணைந்தால் 150 உறுப்பினர்கள் உள்ளது. ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்கள் போதும் என்பதால் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பது சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
எனவே, கூட்டணி அமைப்பது குறித்தும் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்தும், தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத் பவார், டெல்லியில் காங்கிரசின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்து பேசியதாக தெரிகிறது. ஆனால், சோனியா காந்தி மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிக்க திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.