ராஜராஜ சோழன் இந்து அல்ல..! வெற்றிமாறன் பெரியாரின் பேரன்! – திருமாவளவன் ஆதரவு!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (11:56 IST)
ராஜராஜ சோழன் இந்து அல்ல என வெற்றிமாறன் பேசிய கருத்துக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், தமிழர்களின் அடையாளங்கள் திரிக்கப்படுவதாகவும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக திரிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் பேசி இருந்தார். இது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது என வெற்றிமாறனுக்கு ஆதரவாக சீமான், கருணாஸ் உள்ளிட்டோர் பேசியுள்ளனர். அதேசமயம் அவர் இந்து அரசர்தான் என இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர்கள் சிலரும் பேசி வருகின்றனர்.

ALSO READ: கேலிக்கு ஆளான ஆதிபுருஷ் டீசர்… இயக்குனர் மேல் பிரபாஸுக்கு கோபமா?

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்” எனக் கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்