ராஜராஜ சோழன் இந்துவே கிடையாது..!? – வெற்றிமாறனுக்கு சீமான் சப்போர்ட்!

திங்கள், 3 அக்டோபர் 2022 (12:58 IST)
ராஜராஜ சோழன் இந்துவா என்பது குறித்த வெற்றிமாறனின் கருத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால்தான் தமிழ்நாட்டில் மதசார்பற்ற கொள்கை இன்றும் விளங்கி வருகிறது. கலையை சரியாக கையாளாவிட்டால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நமது அடையாளத்தை பறிக்க முயல்கிறார்கள்.

வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயல்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதில் ராஜராஜ சோழன் இந்து அரசன் அல்ல என்ற ரீதியில் வெற்றிமாறன் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் “அருண்மொழி சோழனை இந்து மன்னர் என பேசுவது வேடிக்கையான ஒன்று,கேவலமான ஒன்று. அந்த காலத்தில் நாடும் கிடையாது மதமும் கிடையாது. அவர் சைவர் என உலகத்திற்கே தெரியும்” என்று கூறியுள்ளார்.

Edited By; Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்