அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணியில் இருந்த மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்றும் எங்கள் கட்சியின் சின்னமான பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தார்
அதேபோல் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று தெரிவித்து உள்ளார்
வைகோ மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என்ற கருத்தை கூறியிருப்பது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்