தேனி தொகுதியில் முந்துகிறாரா டிடிவி தினகரன்.. மீண்டும் தங்க தமிழ்ச்செல்வன் தோல்வியா?

Mahendran
வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:30 IST)
தேனி தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தங்க தமிழ்செல்வனுக்கு பாசிட்டிவாக இருந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன் முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திமுக வேட்பாளராக தேனி தொகுதியில் போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வனுக்கு கூட்டணி பலம் இருப்பதால் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று ஆரம்ப கட்ட செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது தேனி தொகுதியில் டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரம் செய்து வருவதை எடுத்து அவர் பக்கம் காற்று வீசுவதாகவும் அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒருவேளை டிடிவி தினகரன் தோல்வி அடைந்தால் கூட மிகவும் சொற்ப வாக்குகளில் தான் வெற்றி வாய்ப்பை இழப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே தேனி தொகுதியை பொறுத்தவரை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தங்கத்தமிழ்செல்வன் அமமுக சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நாராயணசாமி குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் அவரது பிரச்சாரமும் மிகவும் சுணக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தேனி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மதன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்