வார இறுதியில் ரிலீஸாகவுள்ள 7 தமிழ்ப் படங்கள்

sinoj

வியாழன், 4 ஏப்ரல் 2024 (14:55 IST)
தமிழ் சினிமாவில் இந்த வாரம் இறுதியில் 7 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளது.
 
இந்திய சினிமாவில் கோலிவுட் சினிமாவான தமிழ் சினிமாவில் வாரம் தோறும் படங்கள் வெளியாகிவருகின்றன.
 
பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களில் ரிலீஸாகும் நிலையில், சின்ன பட்ஜெட் படங்கள் வாரம் இறுதியில் ரிலீஸாகி வருகின்றன.
 
இந்த நிலையில், தியேட்டரில் நாளை 7 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
 
அதன்படி, இரவின் கண்கள், ஆலகம், ஒரு தவறு செய்தால், வல்லவன் வகுத்தடா, டபுள் டக்கர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ள  ஒயிட்ரோஸ்,  ஆகிய தமிழ்ப்படங்களும், விஜய் தேவரகொண்டாவின் தி ஃபேமிலி ஸ்டார் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை திரைக்கு வரவுள்ளன.
 
 ஜீ.வி. பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள  கள்வன் படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்