சிறுமியின் தலையை துண்டித்து மந்திரம் செய்த சம்பவம்....போலீஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (21:40 IST)
சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவடம் சித்திரவாடியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் இறந்த நிலையில்ம அவரைப்புதைத்த இடத்தில் அவர் தலையைத் துணித்து பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவடம் சித்திரவாடி என்ற பகுதியில் வசிப்பவர்  பாண்டியன். இவர் மகள் கிருத்திகா அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த  நிலையில், கடந்த 6 ஆம் தேதி, வீட்டிற்கு அருகே மின் கம்பத்தில் ஏறி மின் ஊழியர் வேலை செய்தபோது, அதன் அடிப்பகுதி முறிந்து கிருத்திகாவின் மீது விழுந்ததில் அவர் காயம் அடைந்தார்.

அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவ்மனைக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  கடந்த 14 ஆம் தேதி அவர் அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

இதையடுத்து,  கிருத்திகாவின் உடலை சித்ரவாடியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த  நிலையில், 24 ஆம் தேதி அப்பகுதி வழியே சென்ற மக்கள், சிறுமியின் உடலைப் புதைத்த இடத்தில் மஞ்சம், குங்குகம் வைத்து பூஜை செய்த அறிகுறிகளுடன், தலைமுடிகள் இருந்ததால் ,பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் உடலை துண்டித்து தலைச்சன் பிள்ளை தலை வைத்து  மந்திரம் செய்யப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்