கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல்...கத்தியால் வெட்டிக்கொண்ட கொடூரம் !

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (21:29 IST)
சென்னை மாநில கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டியதாக பச்சையப்பா கல்லூரி மாணவர் கார்த்திக் என்ற மாணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று மாலை, சென்னை பச்சையப்பா கல்லூரி - மாநில கல்லூரி மாணவர்களிடையே இதில் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் மோதல் ஏற்பட்டது. 
 
அப்போது, மாநிலக் கல்லூரியைச்  சேர்ந்த 3 ஆம் ஆண்டு மாணவ்ர் நேரு என்பவரை , பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் வழிமறுத்து நேருவின் ஐடி கார்டை பறித்துக்கொண்டு அவரது தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
 
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின், மாணவர் நேருவை வெட்டிய கார்த்திக் என்ற மாணவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த கத்தியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்