திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை. - முக. ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (21:08 IST)
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை. - முக. ஸ்டாலின்
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக பிப்ரவரி 25 ஆம் நாள் இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
 
இதையடுத்து கடந்த சில  தினங்களாக பேராசிரியர் அன்பழகனுக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என சொல்லப்பட்டது. அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில்,இன்று பேராசிரியரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின் ஸ்டாலின் கூறியதாவது : 

வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை என ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருவதால் அவர்  மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்