கோலம் அலங்கோலமாக இருந்தால் கைது செய்யலாம்: அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (17:09 IST)
குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட சென்னை மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் 
 
இந்த நிலையில் கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது ’கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தததால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கோலம் மூலம் கூறிய கருத்து அலங்கோலமாக இருந்தால் கைது செய்ய வேண்டியது வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் ’குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கழக மகளிரணியினர் நாளை தங்கள் வீட்டின் முன் இந்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து நாளை அனைத்து வீடுகளிலும் குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக கோலம் போடுவோம் என்றும், இவர்கள் அத்தனை பேரையும் போலீசார் கைது செய்யுமா? என்று திமுகவினர் கேள்வி கேட்டு வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்