உத்தர பிரதேசத்தில் அம்மாநில சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.20 ஆயிரம் மணமகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மீத ரூ.15 ஆயிரம் பரிசுப்பொருட்களாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பலர் முறைகேடு செய்வதாக புகார்கள் வந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றுள்ளது. அதில் ஒரு கிராமத்தை சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணத்திற்காக அவர்கள் இவ்வாறு செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணம், பரிசுப்பொருட்கள் திரும்ப பெறப்பட்டதோடு விசாரணையும் நடைபெற்று வருகிறது.