ஆன்லைன் வகுப்புகள்: விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (17:54 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே 
 
குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை தனியார் பள்ளிகளும் ஒருசில அரசு பள்ளிகளும் ஆன்லைனில் நடத்தி வருகின்றன
 
இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனை அடுத்து தற்போது அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதி முறைகள் பின்வருமாறு: 
 
* 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் 
 
* 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் 
 
* எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்