டி.சி, மதிப்பெண் சான்றிதழை இ-சேவை மையத்தில் பெறலாம்! – பள்ளிக்கல்வித்துறை!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (15:21 IST)
பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை பள்ளிகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் தேவைப்படும் நேரம் உடனடியாக மாற்று சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் இ சேவை மையங்கள் மூலமாக பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட 23க்கும் அதிகமான சான்றிதழ்களை இனி இ சேவை மையம் மூலம் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இவை இரண்டாவது படி சான்றுகள் என்றும் மூல சான்றுகளுக்கு பிரதியாக இதை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்