இந்நிலையில் இந்திய ஜனநாயகக் கட்சி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அதன் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார். ”மக்களின் செல்வாக்குடன் போட்டியிடுகிறோம், பல்வேறு துறைகளில் மக்களுக்கு தேவையானதை செய்கிறோம். யாரையும் குறை சொல்லி அரசியல் செய்யும் கட்சி ஐஜேகே இல்லை” ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.