மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு கொரோனா! – தொண்டர்கள் அதிர்ச்சி!

சனி, 29 ஜனவரி 2022 (13:34 IST)
மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக பொதுசெயலாளராக வைகோ இருந்து வருகிறார். மதிமுக கட்சி திமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் இடபங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வைகோ சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்